இலங்கை வலுசக்தி அமைச்சுஅறிவித்ததன்படி, நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூ.ஆர். (QR) குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வருகிறது. எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த கியூ.ஆர். முறைமை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முறைமையின் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதுடன், முறைகேடுகள் மற்றும் அத்துமீறிய கையிருப்புகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பதிவு செய்து பெற்ற கியூ.ஆர். குறியீட்டை பயன்படுத்தி மட்டுமே எரிபொருளை பெற முடியும்.
மேலும் நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இந்த முறைமையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் Ministry அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 5 லீட்டர், முச்சக்கர வண்டிகளுக்கு 15 லீட்டர், மோட்டார் கார்களுக்கு 15 லீட்டர், வான்களுக்கு (Vans)40 லீட்டர், பேருந்துகளுக்கு 60 லீட்டர் லொறிகளுக்கு 200 லீட்டர் என வாகன வகைகளுக்கேற்ப வாராந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்
#SriLankaFuel #QRCodeSystem #FuelQuotas #EnergyMinistrySL #March15Update

