Home உலகம்ஹோர்முஸ் நீரிணை வழியாக சீனாவுடன் தொடர்புள்ள கப்பல்களுக்கு அனுமதி – ஈரான் பரிசீலனை

ஹோர்முஸ் நீரிணை வழியாக சீனாவுடன் தொடர்புள்ள கப்பல்களுக்கு அனுமதி – ஈரான் பரிசீலனை

by admin

 

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையில், ஈரான் அரசு ஒரு புதிய நடவடிக்கையை பரிசீலித்து வருகிறது. அதன்படி, சீனாவுடன்  தொடர்புடைய எண்ணெய் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீாிணை  வழியாக பாதுகாப்பான பயண அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கத்திய ஊடகமான CNNக்கு பேசிய ஒரு ஈரான் அதிகாரி, இந்த அனுமதி வழங்கப்படுவதற்கு ஒரு நிபந்தனை இருக்கலாம் என்று தெரிவித்தார். அதாவது, கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் எண்ணெய் சரக்கு அமெரிக்க டொலருக்கு பதிலாக சீன யுவான் நாணயத்தில் (Yuan) வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டால், சீனாவுடன் உள்ள பொருளாதார உறவுகளை பாதுகாப்பதோடு, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உலக எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீாிணை   வழியாக உலகளவில் அனுப்பப்படும் எண்ணெயின் பெரும் பகுதி கடந்து செல்கிறது. இதனால் அந்தப் பகுதியில் எடுக்கப்படும் எந்த முடிவும் உலக எரிசக்தி சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், சீனாவுடன் தொடர்புள்ள கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கும் திட்டம், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தமாக பார்க்கப்படுகிறது.

#IranChinaAlley #StraitOfHormuz #PetroYuan #OilMarketWar #EconomicStrategy  #சீன யுவான்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More