252
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (Tarash Space Research Center) மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த மையம் முற்றாகச் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் திறனை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி தொடங்கிய இந்தப் போர் நடவடிக்கைகளில், ஈரானின் பல ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளன.
தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகரின் முக்கிய வீதிகளில் ஈரானியக் காவற்துறை குவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் நிலையங்கள் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டொலர் மதிப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைத் தடுப்பதே தமது இலக்கு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
Spread the love

