Home இலங்கை📰 வடமாகாண பாடசாலைகளில் பைபிள் வழங்கல்: பல தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு

📰 வடமாகாண பாடசாலைகளில் பைபிள் வழங்கல்: பல தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு

by admin

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிள் நூல்களை மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க அனுமதி வழங்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு நிறுவனம், வடமாகாண பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூல்களை வழங்குவதற்காக, வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரியிருந்தது. இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனுமதி கடிதம் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாடசாலைகளுக்குள் பைபிள் வழங்கப்படுவது மாணவர்களை மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே பைபிள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், “கிறிஸ்தவ மாணவர்களுக்கு வழங்க வேண்டுமெனில், அதனை சபைகள் ஊடாகவே வழங்க வேண்டும்; ஏன் பாடசாலைகள் மூலம் வழங்கப்பட வேண்டும்?” என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதனால், பாடசாலைகளில் பைபிள் வழங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் வடமாகாண ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இதற்கிடையில், பைபிள் வழங்கல் தொடர்ந்தால் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.  அதேவேளை, யாழ்ப்பாணம் நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பைபிள் வழங்கலுக்கு எதிராக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


#NorthernProvince #JaffnaNews #SchoolEducation #ReligiousNeutrality #PublicProtest

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More