QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
எரிபொருள் நிலையங்களில் நிலவும் நெரிசலைக் குறைக்கவும், விநியோகத்தைச் சீர்படுத்தவும் வாகனங்களின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் (Last Digit of Number Plate) எரிபொருள் வழங்கப்படவுள்ளது. இன்றைய திகதி 19 (ஒற்றை எண்) என்பதால், இன்று ஒற்றை எண்களைக் கொண்ட வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காவல்துறை பாதுகாப்புக்கு மேலதிகமாக இராணுவ மற்றும் கடற்படை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

#FuelRationingSL #QR_System #NumberPlateSystem #JaffnaFuelUpdate

