Home உலகம்டியாகோ கார்சியா தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணை தாக்குதல் – பதற்றம் தீவிரம்

டியாகோ கார்சியா தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணை தாக்குதல் – பதற்றம் தீவிரம்

by admin

டியாகோ கார்சியா தளம், ஈரான் ,ஏவுகணை தாக்குதல் ,

இந்தப் பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவில் உள்ள பிரித்தானிய –அமெரிக்க இணைந்த இராணுவ தளத்தை நோக்கி ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

அதிகாரிகளின் தகவலின்படி, ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் இலக்கைத் தாக்கத் தவறியுள்ளன. அவற்றில் ஒன்று அமெரிக்க போர் கப்பலால் இடைமறிக்கப்பட்டதாகவும், மற்றொன்று தனது பயணத்தை முழுமையாக நிறைவு செய்யாமல் பாதியிலேயே செயலிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல், ஈரான் இந்த மோதலில் முதன்முறையாக இடைநிலை தூர (Intermediate-range) பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாகக் கருதப்படுகிறது. இவ்வகை ஏவுகணைகள் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடியவையாகும் என்பதால், இது பாதுகாப்பு ரீதியாக பெரிய அச்சுறுத்தலாக மதிப்பிடப்படுகிறது.

டியாகோ கார்சியா தளம், இந்தியப் பெருங்கடலில் முக்கியமான இராணுவ மற்றும் மூலோபாய நிலையமாகும். இது பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் இணைந்த கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. அந்த தளத்தை இலக்காகக் கொண்ட தாக்குதல், எதிர்காலத்தில் மேலும் பதற்றமான சூழ்நிலைகளை உருவாக்கக்கூடும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து, பிராந்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மேலதிக நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#IranMissileAttack #IndianOceanConflict #US_UK_Base #MiddleEastTension

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More