Home இலங்கைமன்னாரில் காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளான வெளிநாட்டுப் பறவைகள்.

மன்னாரில் காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளான வெளிநாட்டுப் பறவைகள்.

by admin
 
மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு    பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள்  மூன்று(3)   வங்காலை  பறவைகள்  சரணாலய பகுதி ஊடாக அதி வலு கொண்ட காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.    விபத்துக்குள்ளாகிய பறவைகளில் இரண்டு உயிரிழந்த நிலையிலும், ஒன்று பலத்த காயமடைந்த நிலையிலும் மன்னார் மாவட்ட வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பறவைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் உரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வெளிநாட்டு பறவைகள் மன்னார் தீவு பகுதிக்கு வருகை தரும் காலமாக உள்ளது.இந்த நிலையில் வருகை தந்த பறவைகளில் மூன்று பறவைகள் மன்னாரில்  காற்றாலை மின் சாரத்தை கொண்டு செல்லும் கேபிள்களில்    சிக்கி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டுப் பறவைகளான பிளமிங்கோ (Flamingo) போன்றவற்றை நேரில் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இந்தப் பறவைகளைப் பாதுகாப்பதற்காக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த விபத்து காரணமாக 2 வெளிநாட்டு பறவைகள் உயிரிழந்துள்ளதுடன்,ஒரு பறவை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Mannar #Wildlife #FlamingoDeath #VankalaiSanctuary #WindPowerLines #BirdMigration

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More