அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் ட்ரம்ப், ஈ ரானுக்கு 48 மணி நேர அவகாசம் வழங்கி புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை உடனடியாக திறக்கவில்லை என்றால், ஈரானின் மின்சாரம் மற்றும் ஆற்றல் தொடர்பான முக்கிய கட்டமைப்புகளை தாக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நீரிணை உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், இந்நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இரான் தரப்பில், “எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக உலக எண்ணெய் விநியோகத்தின் சுமார் 20% நடைபெறுகிறது. இதனால் இங்கு ஏற்படும் பதற்றம் உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பாரசீக வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் பி-52 (B-52) போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன எனவும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் ஏற்கனவே அமெரிக்காவின் இலக்கு வரிசையில் ) சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்திற்கு இஸ்ரேல் தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதுடன், தனது எல்லைகளிலும் பாதுகாப்பை அதிகரித்துள்ள நிலையில் நேட்டோ ஆலோசனைக் குழு வெளியேறியுள்ள நிலையில், மேலதிகப் போர் வெடிப்பதைத் தவிர்க்க இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி முயற்சி செய்து வருகின்றன. இந்த 48 மணிநேரக் கெடுவானது ஒரு முழு அளவிலான போருக்கு (Full-scale War) வழிவகுக்கலாம் என ஐ.நா சபை கவலை வெளியிட்டுள்ளது.
ட்ரம்பின் மிரட்டலுக்குப் பதிலளிக்கும் வகையில், ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. அமெரிக்கா ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்கினால், பதிலுக்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் (Desalination) நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. “எமது நாட்டின் எரிசக்தித் துறை தாக்கப்பட்டால், நாம் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பதிலடி கொடுப்போம்” என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி எச்சரித்துள்ளார்.
#TrumpThreat ##Iran48Hours #US_IranConflict #GlobalSecurity #MilitaryEscalation

