Home உலகம்பஹ்ரைனில் மக்கள் குடியிருப்பின் மீது வீழ்ந்து வெடித்த அமெரிக்க ஏவுகணை:

பஹ்ரைனில் மக்கள் குடியிருப்பின் மீது வீழ்ந்து வெடித்த அமெரிக்க ஏவுகணை:

 ரொய்ட்டர்ஸ் புலனாய்வில் திடுக்கிடும் தகவல்கள்!

by admin
கடந்த 2026 மார்ச் 09 அன்று பஹ்ரைனின் சித்ரா தீவில் (Sitra Island) உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அமெரிக்காவினால் இயக்கப்படும் ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணையே காரணம் என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புலனாய்வு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான போர் தொடங்கி 10 நாட்கள் கடந்த நிலையில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. ஆரம்பத்தில் இது ஈரானிய ட்ரோன் (Drone) தாக்குதல் என பஹ்ரைன் மற்றும் அமெரிக்கத் தரப்பால் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், ‘மிடில்பரி இன்ஸ்டிடியூட்’ ஆய்வாளர்கள் மேற்கொண்ட காணொளி மற்றும் தரைவழிச் சேத ஆய்வுகள், அமெரிக்க கடற்படைத் தளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஏவப்பட்ட பேட்ரியாட் ஏவுகணையே நடுவானில் திசைமாறி வெடித்திருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
முக்கிய ஆய்வறிக்கை முடிவுகள்:
ஏவுகணை திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி, மிகக் குறைந்த உயரத்தில் பயணித்துள்ளது. இது தொழில்நுட்பக் கோளாறாகவோ அல்லது கவனக்குறைவாக ஏவப்பட்டதாகவோ இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சம்பவ இடத்தில் ட்ரோன் தாக்குதலுக்கான எந்தத் தடயமும் இல்லை. மாறாக, ஏவுகணையின் வெடிபொருட்களும் எரிபொருளுமே மக்கள் குடியிருப்புப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக ஆதாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
இந்தச் சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட பல பொதுமக்கள் காயமடைந்ததுடன், பல வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளன. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வாறான ஏவுகணைகளைப் பயன்படுத்துவது “பொறுப்பற்ற செயல்” என நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பேட்ரியாட் ஏவுகணையின் தொடர்பு இருப்பதை மார்ச் 21 அன்று பஹ்ரைன் அரசு ஏற்றுக்கொண்டது. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு என்ற வாதத்தை அது மறுத்துள்ளது. அதேவேளை, அமெரிக்காவின் பென்டகன் மற்றும் மத்திய கட்டளைப் பணியகம் இது குறித்து முறையான விளக்கங்களை இன்னும் அளிக்கவில்லை.
இந்த நிகழ்வு, பிராந்திய மோதல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் பஹ்ரைன் இடையிலான பாதுகாப்பு ஒருங்கிணைப்பில் உள்ள சிக்கல்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More