330
இதனையடுத்து முக்கிய எச்சரிக்கைகள்:
ட்ரம்ப்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) விடுத்துள்ள அறிக்கையில்:”ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அனைத்து மின், நீர் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகளும் எமது இலக்குகளாக மாற்றப்பட்டு, அவை மீள முடியாத வகையில் அழிக்கப்படும்.” என எச்சரித்துள்ளார்.
எண்ணெய் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20% செல்லும் ஹார்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.பெப்ரவரி 28 முதல் நீடிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இந்த மோதல், இப்போது ஒரு முழு அளவிலான பிராந்தியப் போராக மாறும் விளிம்பில் உள்ளது.
ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க ஈரான் தவறும் பட்சத்தில், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள 48 மணிநேரக் கெடு, மத்திய கிழக்கில் பெரும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார் மற்றும் குவைத் ஆகிய வளைகுடா நாடுகள், ஈரானின் மின் கட்டமைப்பு இலக்கு வைக்கப்பட்டால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் குறித்து அமெரிக்காவிற்குத் தங்களது கவலையைத் தெரிவித்துள்ளன.
குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் தங்களின் குடிநீர்த் தேவையில் 90% வரை கடல் நீரை நன்னீராக்கும் ஆலைகளையே (Desalination plants) நம்பியுள்ளன. ஈரான் பதிலடி கொடுத்தால் இந்த ஆலைகள் முடங்கும் அபாயம் உள்ளது.மேலும் பிராந்தியத்தின் மின்சாரக் கட்டமைப்பு மற்றும் எண்ணெய் நிலையங்கள் ஈரானின் ஏவுகணைகளுக்கு இலக்காகலாம் என அஞ்சப்படுகிறது.
தற்போது அமெரிக்கா விதித்துள்ள 48 மணிநேரக் காலக்கெடு இன்று (மார்ச் 23, திங்கட்கிழமை) இரவுடன் முடிவடைகிறது. உலக நாடுகள் இந்தப் பதற்றத்தைக் குறைக்கத் தீவிர ராஜதந்திர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
Spread the love

