துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற சோகமான வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60), அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28) மற்றும் சிவாஸ்கரன் சுகந்தி (47) ஆகியோர் அடங்குகின்றனர்.
கிடைத்த தகவல்களின் படி, ஜெயநந்தினி கணேசலிங்கத்தின் 60வது பிறந்தநாளை துருக்கியில் கொண்டாடிய பின்னர், மீண்டும் சுவிற்சர்லாந்திற்கு திரும்புவதற்காக விமான நிலையம் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த துயர சம்பவம், வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்திற்கான காரணங்கள் தொடர்பில் துருக்கி அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#IstanbulAccident #SwissLankans #TragicDeath #BirthdayCelebration #TurkeyPolice

