Home இலங்கையாழ்.பல்கலை துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு

யாழ்.பல்கலை துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் புதன்கிழமை பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குத் துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.பதவி ஏற்பு நிகழ்வில், முன்னாள் துணைவேந்தர் எஸ், சிறிசற்குணராசா , பதிவாளர் காண்டீபன் , பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் தி. வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதியாகவும், கணக்கியல் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட சிரேஷ்ட பேராசிரியராகவும் விளங்குகிறார். இவரது பதவிக்காலத்தில் பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம் மற்றும் சர்வதேசத் தொடர்புகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

#NewVCJaffna #ProfVelnambi #JaffnaUniversity #AcademicLeadership #UniversityNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More