Home இலங்கைகொழும்புத்துறையில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

கொழும்புத்துறையில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

by admin

 

யாழ்ப்பாணத்தில் 57 போதை மாத்திரைகளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரை பாவனை அதிகமாக காணப்படுவதாக யாழ்ப்பாணம் காவல்துறைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ,காவல்துறையினர் மேற்கொண்ட  விசேட நடவடிக்கையின் போதே , ஐந்து இளைஞர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் , அவர்களிடம் இருந்து 57 போதை மாத்திரைகளை மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.
#DrugBustJaffna #Colombuthurai #PoliceOperation #YouthInDrugs #IllegalPills
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More