Home இலங்கையாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையே முக்கிய அரசியல் சந்திப்பு!

யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையே முக்கிய அரசியல் சந்திப்பு!

by admin

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் இணைத் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.ரவீந்திரா (வேந்தன்), முருகேசு சந்திரகுமார், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

#ITAK #DTNA #Nallur #Jaffna #C.V.K. Sivagnanam  #M.A. Sumanthiran  #Selvam Adaikalanathan #Suresh Premachandran Political Discussion
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More