இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா என அழைக்கப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் 128வது ஜனன தினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31) நினைவு கூறப்பட்டது. மன்னாாில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை 10.15 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலையடியில் இடம் பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை உறுப்பினர்கள்,கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் அன்ரனி டேவிட்சன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன் போது அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


