ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பானதாகக் கூறப்படும் இலஞ்சச் சம்பவத்தில், சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (02) திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம், இன்று தனது தீர்மானத்தை அறிவித்தபோது இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும், குறித்த பிடியாணை உத்தரவை இலங்கையின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்கள் நாட்டிற்கு வருகை தந்தால் உடனடியாக அவர்களை கைது செய்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு பணித்துள்ளார்.
#AirbusScam #ShameendraRajapaksa #ColomboMagistrateCourt #CorruptionCaseSL #BriberyCommission

