காணாமல் போன கடற்தொழிலாளர்களை மீட்டு கரை சேர்ந்த சக தொழிலாளர்கள்

by admin

 

யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன இரு கடற்தொழிலாளர்களும் சக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.  சுப்பர்மடம் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற, தனபாலசிங்கம் குணபாலசிங்கம் (வயது 45) மற்றும் செபஸ்தியான்பிள்ளை சந்திரலிங்கம் (வயது 35) ஆகிய இரு கடற்தொழிலாளர்களும் கடற்தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் இரு கடற்தொழிலாளர்களும் இந்திய கடல் எல்லை பகுதியில் தத்தளித்த நிலையில் தம்மால் மீட்கப்பட்டு ,பாதுகாப்பாக வைத்திருப்பதாக பருத்தித்துறை கடற்தொழிலாளர்களுக்கு , இந்திய கடற்தொழிலாளர்கள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு அறிவித்த நிலையில் , அப்பகுதிக்கு விரைந்த பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள் குறித்த இரு கடற்தொழிலாளர்களையும் படகுடன் மீட்டு கரை சேர்ந்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More