160
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்தும் , களவாடப்பட்ட பொருட்களில் ஒரு தொகுதி மீட்கப்பட்டுள்ளது. யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடை ஒன்றில் மூன்று இலட்சத்து ஆறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான வலைகளை திருடப்பட்டுள்ளது. அதேவேளை கலட்டி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில், மூன்றரை பவுண் தங்க மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் என்பன களவாடப்பட்டுள்ளது.
குறித்த இரு திருட்டு சம்பவங்கள் தொடர்பிலும் யாழ்ப்பாணம் தலைமையக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறையினா் நான்கு பேரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து களவாடப்பட்ட பொருட்களையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Spread the love

