140
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான செலவீன பாதீட்டுக்கு
அதன் போது , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையி ல் , அன்றைய தினம் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான ஏது நிலை காணப்படவில்லை. அதனால் 27ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது .
அதன், மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீட்டுக்கான அங்கீகா ரம் நீதி அமைச்சினால் இது வரையில் வழங்கப்படவில்லை என்ற விடயத்தை சட்ட வைத்திய அதிகாரி மன்றில் சுட்டிக்காட்டினார். அதனை அடுத்து பாதீடு தொடர்பிலும் , 27ஆம் திகதி அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியுமா என்பதனை இறுதி செய்யும் வகையிலும் எதிர்வரும் 21ஆம் திகதி திறந்த மன்றில் வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொள்ள திகதியிடப்பட்டது
அதேவேளை , புதைகுழியில் இருந்து வெள்ளநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது சிறிதளவான ஈரலிப்பு தன்மையே காணப்படுகிறது. 20ஆம் திகதிக்கு முன்னர் அகழ்வு பணிக்கு ஏற்றவாறான நிலைமை காணப்படும் என எதிர்க்கப்பார்க்கப்படுவதாக மன் றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
#ChemmaniMassGrave #JaffnaCourt #MinistryOfJustice #ExcavationDelay #ForensicInvestigation
Spread the love

