Home இலங்கைஅனலைதீவில் ஆயுதங்கள் மீட்பு

அனலைதீவில் ஆயுதங்கள் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் துப்பாக்கி , அவற்றுக்கான மகசீன்கள் இரண்டு மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.  அனலைதீவில் உள்ள தனியார் காணி ஒன்றினை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணி உரிமையாளர் துப்பரவு செய்த வேளை துப்பாக்கி , அவற்றுக்கான இரண்டு மகசீன்கள் மற்றும் கைக்குண்டு என்பவற்றை கண்டு அது தொடர்பில்  காவல்துறையினருக்கு அறிவித்திருந்தார்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற  காவல்துறையினா் அவற்றினை அடையாளப்படுத்தி, அவற்றினை மீட்பதற்கு அனுமதி கோரி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளனர்.
#Analaitivu #WeaponFound #HandGrenade #JaffnaNews #KaytsCourt
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More