குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், NDB வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெருமளவு உள்நாட்டு நிதி மோசடி சம்பவம் தொடர்பில் நான்காவது சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இதன்மூலம் காவலில் உள்ளோர் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது. புதியதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த கைது, இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட மூவர் தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு ரூ.13.2 பில்லியன் அளவிலான நிதி மோசடி மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. விசாரணைகள் CID இன் கணினி குற்றப் பிரிவினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கிய சந்தேக நபர் வங்கியின் “Payments and Settlements” பிரிவில் பணியாற்றிய உதவி மேலாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் அவரது சகோதரர் மற்றும் மேலும் ஒரு வங்கி ஊழியருடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
முதலில் கைது செய்யப்பட்ட 33, 34 மற்றும் 35 வயதுடைய மூவர், நீதிமன்றத்தில் முன்னிலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்மாதம் 14ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.
#NDBBankFraud #CIDInvestigation #FinancialCrime #SriLankaNews #ComputerCrimes

