லெபனானில் இஸ்ரேல் பாரிய வான்வழித் தாக்குதல் – நூற்றுக்கணக்கானோர் பலி

by admin

 

 

மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலைமைக்கிடையில், Israel நேற்று (2026 ஏப்ரல் 08)  லெபனான்  முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாரிய வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் தகவலின்படி, வெறும் 10 நிமிடங்களுக்குள் லெபனானில் 100-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் பெய்ரூட் நகரின் மத்திய பகுதிகள், தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

லெபனான் சுகாதார அமைச்சின் தகவலின்படி, இந்த தாக்குதல்களில் குறைந்தது 254 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், அமொிக்கா மற்றும் ஈரான்  இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வர்த்தக மையங்கள் மீது எச்சரிக்கையின்றி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன், மருத்துவப் பணியாளர்கள் இந்தச் சம்பவத்தை “பெரும் படுகொலை” என விவரித்துள்ளனர்.

#LebanonAttack #IsraelConflict #Beirut #BreakingNews #MiddleEastWar #HumanRights #April2026 #LebanonCrisis #lebanon_under_attack

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More