லண்டன் நகர மையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. Covent Garden பகுதியில் , காவல்துறையினாின் துரத்தலின் போது ஒரு கார் சுற்றுலா பயணிகளுக்கான பெடிகாப் (tuk-tuk) வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரும் ஆபத்தான காயங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் Soho பகுதியில் இருந்து அதிக வேகத்தில் காவல்துறையினரால் துரத்தப்பட்ட நிலையில் . Bow Street பகுதியில் சுமார் மாலை 4 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
காவல்துறையினா் சம்பவ இடத்திலேயே 31 வயதான ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் மீது திருடப்பட்ட வாகனம் ஓட்டுதல், காவல்துறையினரை தவிர்க்க முயற்சித்தல், ஆபத்தான ஓட்டம், அவசர சேவை ஊழியரை தாக்குதல் மற்றும் Class A போதைப்பொருள் வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவத்தை பார்த்தவர்கள், கார் மிகுந்த வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெடிகாப் வாகனத்தை மோதி, பின்னரும் சாலையில் சீரற்ற முறையில் சென்றதாக கூறியுள்ளனர். விபத்துக்குப் பிறகு வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து Metropolitan Police Service (Scotland Yard) விசாரணை தொடங்கியுள்ளது. சம்பவத்தை பார்த்தவர்கள் தகவல் வழங்குமாறு காவல்துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனர்.
#London crash #Police chase #Covent Garden #Soho #Bow Street #Stolen Mercedes #Pedicab accident

