முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளாா். , கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் வழங்கிய சோதனை பிடியாணையின் அடிப்படையில் அவரது இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் அவா் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த சோதனையின் போது இரண்டு டி-56 மெகசின்கள், 221-க்கும் மேற்பட்ட ரவைகள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

