251
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள குளமொன்றில் சடலம் மிதப்பதாக அச்சுவேலி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 50 வயது மதிக்க தக்கவர் எனவும் , அடையாளம் காண உதவுமாறும் காவல்துறையினா் கோரியுள்ளனர்.
#UnidentifiedBody #BodyFound #PoliceInvestigation #CrimeNews #Jaffna #Puthur
Spread the love

