பாதாள உலகக் குழுத் தலைவன் Mohamed Najim Mohamed Imran (கஞ்சிப்பாணி இம்ரான்) என்பவரின் வழிகாட்டுதலின் கீழ் கொழும்பு பகுதியில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு (TID) அதிகாரிகள் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது நேற்று (20) ஜா-எல, கலா வீதி பகுதியில் இந்த கைது இடம்பெற்றது. கைது செய்யப்பட்டவர் கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக குண்டுவெடிப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட நபரை காவல்துறையினா் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆரம்ப விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLanka #Colombo #TID #TerrorPlot #SuspectArrested #Underworld #KanjipaniImran #JaEla

