Home இலங்கைமன்னாாில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் பதிவுகள் முன்னெடுப்பு- இதுவரை 427 விண்ணப்பங்களுக்கான பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுப்பு.

மன்னாாில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் பதிவுகள் முன்னெடுப்பு- இதுவரை 427 விண்ணப்பங்களுக்கான பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுப்பு.

by admin

மன்னார் மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (24) மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலக பிரதிநிதிகள்,சட்டத்தரணிகள் கலந்து கொண்டதோடு,மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை தேடும் நூற்றுக்கணக்கான உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் இதுவரை காணாமல் போனவர்கள் தொடர்பாக 612 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவற்றில் 427 விண்ணப்பங்களுக்கான பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும்,  அவற்றுக்கான இடைக்கால நிவாரணம்,காணாமல் போனதற்கான சான்றிதழ்,மரண சான்றிதழ் என்பவற்றை வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலக பிரதி ஒருவர் தெரிவித்தார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More