காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சியை தடுத்து நிறுத்தினர். தாய்லாந்திலிருந்து பிக்குகள் போன்று தோன்றும் உடையில் இருந்த 22 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இவர்களின் பயணப்பைகளில் இருந்து 110 கிலோக்கும் மேற்பட்ட “Kush” மற்றும் “Hashish” வகை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒவ்வொருவரும் சுமார் 5 கிலோக்கும் அதிகமான போதைப்பொருள்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த போதைப்பொருட்கள் பயணப்பைகளின் இரகசிய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததுடன், பள்ளி உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களுடன் கலந்து மறைக்கப்பட்டிருந்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 1.1 பில்லியனை விட அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் பொறுப்பி காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நீா்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைவப்படுத்தப்பட உள்ளனர்.
#DrugBust #Arrested #MonkDisguise #NarcoticsSmuggling #Kush #Hashish #AirportSeizure #BandaranaikeInternationalAirport #SriLanka #Thailand

