யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு மலேரியா நோயாளிகள் ஐவர் இனம் காணப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் , இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு மலேரியா நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாகவும் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர் நிசாந்தினி தெரிவித்துள்ளார். வவுனியா மலேரியா தடை இயக்கத்தின் பிராந்திய அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,
இருந்த போதிலும் வெளிநாட்டு பயணங்கள், மலேரியா நோய் நுளம்புகளின் பெருக்கங்கள் மூலம் மீண்டும் மலேரியா நோய் ஏற்படும் அபாயமுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு இலங்கையில் 42 மலேரியா நோய் தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். அவற்றில் ஒரு மரணமும் பதிவாகியது. 2026 ஆம் ஆண்டு இன்று வரை 10 பேர் நோய் தாக்கங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மக்களின் பங்களுப்பு அவசியம். அவர்கள் வெளிநாடு செல்வதாக இருந்தால் ஒரு வாரத்திறகு முன்பு மலேரியா தடை இயக்கத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். வெநாடுகளில் இருந்து வருபவர்கள் மலேரியா தடை இயக்கத்தை தொடர்பு கொண்டு இரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலமே தடுக்க முடியும். இது குணமாக்க கூடிய ஒரு நோய்.
நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றி நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ஆண்டில் எமது தலைப்பு ”மலேரியாவை முடிவுக்கு கொண்டு வர முனைவோம். இப்போது என்னால் முடியும். இப்போது நாம் செய்ய வேண்டும். பயணிகளின் மலேரியாவை தடுக்கவும் பரிசோதிக்கவும் கவனத்தில் கொண்டு வருவோம்” என்பதாகும். எனவே அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்தார்.
#Malaria Cases #Jaffna #Sri Lanka #Vavuniya #PublicHealth #MalariaAwareness #WorldMalariaDay #DiseasePrevention

