140
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (09 மே 2026) அதிகாலை வேளையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே இந்தத் தீ பரவல் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை வேளையில் திடீரெனப் பற்றியெரிந்த இந்தத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து சுமார் 5 மணிநேரப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தற்பொழுது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தினால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love

