யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலை
ஆசிய நாடுகளின் நடுத்தர அளவிலான விமானங்கள் வந்து செல்லக்கூடிய வகையில் பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்த ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
கீரிமலை, காங்கேசன்துறை மற்றும் பலாலி வீதிகளில் பழைய வழித்தடங்களில் பேருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவும், பலாலி வீதியுடன் இணைக்கும் எஞ்சிய 500 மீற்றர் பகுதியை விடுவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை சூழலில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வெளிமாவட்டப் பேருந்துகளை வீரசிங்க மண்டபத்திற்கு அருகிலுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மாணவர் பற்றாக்குறையால் மூடப்படும் பாடசாலைகளை, அவற்றை வழங்கிய அமைப்புகளிடமே மீண்டும் ஒப்படைப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டது. பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்காக ‘Zoom’ தொழில்நுட்பம் ஊடாகப் பிரபல்யமான பாடசாலைகளுடன் இணைந்து கற்கும் முறையை உருவாக்குதல் மற்றும் ஒவ்வொரு வலயத்திலும் ஒரு பாடசாலையை நவீன ஆய்வுகூடங்களுடன் தரம் உயர்த்துதல் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலின் போது , சாவகச்சேரி, ஊர்காவற்றுறை போன்ற பிராந்திய வைத்தியசாலைகளைத் தரம் உயர்த்துவதுடன், அங்குள்ள மருத்துவர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், வடமாகாணத்திலுள்ள குளங்களைப் புனரமைத்து நன்னீர் சேமிப்பை அதிகரித்தல் மற்றும் வடிகாலமைப்புகளைச் சீரமைத்தல், குறிகட்டுவான் இறங்குதுறை மற்றும் தீவுப்பகுதிகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், மாகாண அதிகார வரம்பிற்கு உட்பட்ட விடயங்களை அந்தந்த திணைக்களங்கள் ஊடாக விரைவாக முன்னெடுப்பது , ஏனையவற்றை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்து ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.
#NorthernProvinceGovernor #Vethanayahan #PalaliInternationalAirport #AirportExpansion #JaffnaTeachingHospital #ChavakachcheriHospital #Kurikattuwan

