Home இலங்கைஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் உயிராபத்தான நிலையில் அனுமதி!

ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் உயிராபத்தான நிலையில் அனுமதி!

by admin

 

யாழ்ப்பாணத்தில் காவற்துறையினரின் கைதில் இருந்து தப்பிக்க, தன்வசம் வைத்திருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஒருவர், தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுழிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக வட்டுக்கோட்டை காவற்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவற்துறையினரைக் கண்டதும், அந்த இளைஞன் தன்னிடம் இருந்த போதைப்பொருள் பொட்டலத்தை வாய்க்குள் போட்டு விழுங்கியுள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட காவற்துறையினர், அவரிடம் இருந்த மற்றுமொரு பொட்டலத்தை மீட்டதுடன், குறித்த இளைஞனை விரைவாகக் கைது செய்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். தற்போது அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பில், அவரிடம் போதைப்பொருள் வாங்கியவர்கள் மற்றும் அவருக்கு இதனை விநியோகித்தவர்கள் குறித்து காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#Jaffna #DrugBust #HealthAlert #JaffnaNews #PoliceAction #HeroinSeized #SriLankaNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More