Home இலங்கையாழ்ப்பாணம் சிறையில் பிறந்தநாளைக் கழித்த சொல்லிசை பாடகர் சங்கீத்சன்:

யாழ்ப்பாணம் சிறையில் பிறந்தநாளைக் கழித்த சொல்லிசை பாடகர் சங்கீத்சன்:

உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு!

by admin
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் தனது பிறந்தநாளை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கழித்துள்ள நிலையில், அவரது தாயாரும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்ட குழுவினரும் நேற்றைய திகதியில் சிறைச்சாலைக்குச் சென்று அவரை நேரில் பார்வையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனின் பிறந்தநாள் நேற்றைய வெள்ளிக்கிழமை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவரது கைதுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்குச் சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.
இதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் விளமறியலில் உள்ள பாடகர் சங்கீத்சனிடம் கையொப்பம் பெறும் நோக்கிலேயே, சட்டத்தரணி கேசவன் சயந்தன் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். இச்சந்திப்பின் போது பாடகரின் தாயாரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More