Home உலகம்ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

by admin

மேற்கு ஆசியாவில் நீடித்து வந்த கடுமையான இராணுவ மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்கால அமைதி ஒப்பந்தம் (MoU) ஒன்றில் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளனா்

பிரான்சின் வெர்சைல்ஸ் (Versailles) மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த 14 அம்ச உடன்படிக்கையில் (Islamabad MoU) கையெழுத்திட்டுள்ளார் என்பதை வெள்ளை மாளிகை நேற்று (2026 ஜூன் 17, புதன்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது.  சர்வதேச எரிசக்திச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த மோதலைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் இணங்கியுள்ளன.

ஒப்பந்தத்தின் முக்கிய 5 அம்சங்கள்:

  1. போர் நிறுத்தம்: லெபனான் உட்பட அனைத்து முன்னணிகளிலும் இருதரப்பு மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்கு இடையிலான இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும்.

  2. ஹோர்முஸ் நீரிணை திறப்பு: கடந்த போர்க்காலத்தில் மூடப்பட்ட உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) 30 நாட்களுக்குள் ஈரான் மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கும்.

  3. கடற்படை முற்றுகை நீக்கம்: ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகையை (Naval Blockade) அமெரிக்கா உடனடியாக மீட்டுக் கொள்ளும்.

  4. எண்ணெய் தடைகளில் இருந்து விலக்கு: ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும், அதனுடன் தொடர்புடைய வங்கிச் சேவைகளுக்கும் அமெரிக்கப் திறைசேரி (US Treasury) உடனடியாக விசேட விலக்குகளை (Waivers) வழங்கும்.

  5. அணுசக்தி மற்றும் பொருளாதார நிதியம்: ஈரானின் அணுசெறிவு யூரேனியத்தை நீர்த்துப்போகச் செய்யும் (Down-blend) பணிகளை ஐநா-வின் (IAEA) மேற்பார்வையில் செய்ய ஈரான் சம்மதித்துள்ளது. இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர், ஈரானின் மறுசீரமைப்பிற்காக $300 பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்க அமெரிக்காவும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளும் இணைந்து செயல்படுவர்.

இந்த உடன்படிக்கையானது ஒரு நிரந்தரத் தீர்வல்ல, மாறாக இதுவொரு இடைக்கால ஒப்பந்தமாகும் (Interim Deal).  இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்குவது தொடர்பான இறுதி உடன்பாட்டை எட்ட இரு நாடுகளுக்கும் 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரானுக்கு அமெரிக்கா அளவுக்கு அதிகமான பொருளாதாரச் சலுகைகளை வழங்கியுள்ளதாக அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினர் மற்றும் டிரம்ப்பின் விமர்சகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

 #USIranPeaceDeal  #DonaldTrump #StraitOfHormuz #WestAsiaConflict  #GlobalOilMarket

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More