Home உலகம்கனடாவின் மொன்றியாலில் துப்பாக்கிச் சூடு- காவல்துறை அதிகாரி உட்பட மூவர் பலி!

கனடாவின் மொன்றியாலில் துப்பாக்கிச் சூடு- காவல்துறை அதிகாரி உட்பட மூவர் பலி!

by admin

கனடாவின் மொன்றியால்(Montreal) நகரில் நேற்று திங்கட்கிழமை (2026 ஜூன் 22) மதிய வேளையில் அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், காவற்துறை அதிகாரி ஒருவர், சிவிலியன் ஒருவர் மற்றும் ஆயுதம் தாங்கிய குற்றவாளி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனா். மொன்றியாலின் கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) பகுதியில் உள்ள ஹில்டன் (Hilton) விடுதிக்கு அருகில் நேற்று முற்பகல் 11:35 மணியளவில் இக்கோரச் சம்பவம் பதிவாகியுள்ளது.

 மொன்றியால் காவற்துறையில் (SPVM) கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கடமையாற்றி வந்த 34 வயதுடைய முகமது லமீன் பென்ரெடோவான் (Mohamed Lamine Benredouane) என்ற அதிகாரியே இதில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மொன்றியாலில் கடந்த 24 ஆண்டுகளில் காவற்துறை அதிகாரி ஒருவர் கடமையின் போது கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இத்துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிவிலியன், அப்பகுதியில் வசித்து வந்த யூத சமூகத்தைச் சேர்ந்த மைக்கேல் மோஷே மிஸ்ராஹி (Michael Moshe Mizrahi) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொரு பெண் காவற்துறை அதிகாரி தற்போது தீவிர சிகிச்சைக்குப் பின் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, சீரான நிலையில் (Stable Condition) உள்ளதாகப் பொலிஸ் அதிபர் ஃபாடி டஹர் (Fady Dagher) உறுதிப்படுத்தியுள்ளார்.

ராணுவப் பாணி ஆடைகளை அணிந்து கொண்டு, அதிநவீன நீளத் துப்பாக்கி (Long Gun) மூலம் சரமாரியாகச் சுட்டுக் கொண்டிருந்த நபரைக் காவற்துறையினர் சம்பவ இடத்திலேயே சுட்டு வீழ்த்தினர். அவர் தனியாகவே இத்தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதலாளி தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஒரு கொள்கை அறிக்கை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், பெண்களுக்கு எதிரான தீவிர “இன்செல்” (Incel – இச்சை நிறைவேறா ஆண்கள் குழு) கொள்கைகள் மற்றும் ஆபாசப் படத் தொழில்துறைக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள் எழுதப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. இத்தாக்குதல் ‘பார்ன்ஹப்’ (Pornhub) நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அருகில் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#MontrealShooting2026 #SPVMOfficerKilled #CoteDesNeiges #IncelIdeologyAttack  #CanadaCrimeNews

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More