45
முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயம் தொடர்பான திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்ந்த வழக்கு ஒன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சுரேஷ் சலே ஆஜராகியிருக்கவில்லை. இது குறித்து அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு விளக்குகையிலேயே, தனது கட்சிக்காரர் கடுமையான இருதயக் கோளாறு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான மருத்துவ சான்றிதழ்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகளை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதுடன், அவரது உடல்நிலை குறித்த மேலதிக மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Spread the love

