45
இலங்கை தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் தலைவர் சியாமளா பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், தேசிய லொத்தர் சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று ஊழியர்களை, அரச நிறுவனப் பணிகளில் அமர்த்துவதற்குப் பதிலாக, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணியாளர் குழாமில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கத்திற்குச் சொந்தமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
‘நியூ டெமாக்ரடிக் பார்ட்டி’யின் (New Democratic Front – NDF) பொதுச் செயலாளராகவும் பணியாற்றும் சியாமளா பெரேரா, கடந்த திங்கட்கிழமை அன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு, அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

