48
பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) நாடாளுமன்ற இராஜாங்க அமைச்சராகவும் (Parliamentary Under-Secretary of State), ஆளும்கட்சியின் உதவி கொறடாவாகவும் (Assistant Whip) தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, இந்த நியமனம் 2026 ஜூலை 22 ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பின்னணி மற்றும் அரசியல் பயணம்: வரலாற்று வெற்றி: கடந்த 2024 ஜூலை மாதம் நடைபெற்ற பிரித்தானிய பொதுத்தேர்தலில் ‘ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ’ (Stratford and Bow) தொகுதியில் தொழிற் கட்சி (Labour Party) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உமா குமரன், பிரித்தானிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் வம்சாவளி உறுப்பினர் என்ற வரலாற்றைப் படைத்தார்.
குடும்ப பின்னணி: இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர்கள், பிரித்தானியாவில் தஞ்சமடைந்தவர்கள் ஆவர்.
அனுபவம்: அரசியல் மற்றும் பொதுக் கொள்கை துறைகளில் முதுகலை பட்டம் பெற்றுள்ள உமா குமரன், லண்டன் மேயரின் மூத்த ஆலோசகராகவும், சர்வதேச காலநிலை அமைப்புகளின் அரசதந்திர அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
வெளியுறவுத்துறையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த முக்கியப் பதவி, பிரித்தானிய வாழ் தமிழ் மக்களிடையே பெருமகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

