Home இலங்கைமுள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பம் :

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் ஆரம்பம் :

by admin

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல காணியில் துப்பரவுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் நோக்கில் இன்று மக்கள் ஒன்றுகூடி முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியில் துப்பரவுப் பணிகளை முன்னெடுத்தனர்.

பிரதேசத்தை சேர்ந்த மக்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் மற்றும் கரை துறைப்பற்று பிதேசசபை உறுப்பினர்கள் சிலரும் இந்த சிரமதானப் பணியில் இணைந்து கொண்டனர்.   மாவீரர் தினத்தை முன்னிட்டு துயிரும் இல்லங்களை துப்புரவு செய்யும் பணிகள் வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More