209
நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் நேற்று இரவு முதல் இவ்வாறு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
மேலும் மழையுடனான காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளாh
Spread the love