Home இந்தியாமும்பையில் விச வாயு தாக்கி ஐவர் பலி

மும்பையில் விச வாயு தாக்கி ஐவர் பலி

by admin


மும்பை புறநகரான கல்யாண் பகுதியில் கிணற்றை சுத்தம் செய்தபோது விச வாயு தாக்கியதில் தொழிலாளர் ஒருவரும் அவரை காப்பாற்றச் சென்ற 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.  கிணற்றுக்குள் இறங்கி சுத்தம் செய்யத் தொடங்கிய தொழிலாளி நீண்டநேரமாகியும் வெளியே வராததால், அவரைக் காப்பாற்றுவதற்காக சென்ற இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட போது உள்ளே இறங்கிய 2 தீயணைப்பு படை வீரர்களும் மூர்ச்சையாகி உயிரிழந்துள்ளனர்.  இதையடுத்து 5 பேரின் உடல்களும் வலை மூலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் பரவியிருந்த விஷ வாயுவை சுவாசித்ததால் 5 பேரும் இறந்திருக்கலாம் என தெரிகிறது. கிணற்றை பல நாட்களாக மூடி வைத்திருப்பதால் விசத்தன்மை கொண்ட வாயு உருவாகியிருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More