Home சினிமாசிங்கம் கூட்டணி – 5ஆவது தடவையாக இணையும் சூர்யாவும் ஹரியும்

சிங்கம் கூட்டணி – 5ஆவது தடவையாக இணையும் சூர்யாவும் ஹரியும்

by admin


நடிகர் சூர்யாவும் இயக்குனர் ஹரியும் கூட்டணி இதுவரையில் நான்கு திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அடுத்து மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் இருவரும் இணையவிருக்கின்றனர்.  நந்த கோபாலன் குமரன் என்ற ‘என்.ஜி.கே’  திரைப்படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வகிறார். இப் படத்துடன் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் சூர்யா. மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி, சிராக் ஜானி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடிக்க, அவருடைய சிறப்புப் பாதுகாப்பு பிரிவின் தலைவராக சூர்யா நடிப்பதாக கூறப்படுகின்றது.

இந்த படத்தின் பின்னர், நடிகர் சூர்யா அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, ஹரி இயக்குகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகம் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது. புதிய கதைக்களத்துடன் இருவரும் களம் இறங்குகின்றனர். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More