குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரொமானியாவில் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் அமைப்பது தொடர்பில், ரொமானியாவின் ஜனாதிபதி Klaus Iohannis அந்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரொமானியாவில் நடத்தப்பட்டிருந்த தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. சோசலிச ஜனநாயகக் கட்சி 46 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. சோசலிச ஜனநாயகக் கட்சி கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றம் சாட்டப்படவர்கள் பிரதமராக நியமிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி Klaus Iohannis திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.