160
காத்தான்குடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் புதிய காத்தான்குடியைச் 39 வயதான சேர்ந்த ஏ.எல்.எம். அனீஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டு வளாகத்தில் மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்து மின்சாரத்துடன் தொடர்புடைய வயர் வீட்டு முற்றத்தில் தேங்கியிருந்த மழைநீரில் தொடர்புபட்டு இவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love