ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது.
இதனையடு;து பராளுமன்றத்தில் நிலவிய அமைதியின்மை காரணமாக பாராளுமன்றத்தின் அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே சபாநாயகரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடுமென அறிவித்த சபாநாயகா நாளை கூடும் பாராளுமன்றத்தில் மீண்டும் புதிய பிரதமர் தெரிவு இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சம்பந்தன் – அஜித்பெரேரா லக்ஸ்மன் கிரியல்ல உறுதிசெய்தனர்..
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். ஜேவிபியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஐக்கியதேசியகட்சியின் அஜித்பெரேரா லக்ஸ்மன் கிரியல்லவும் இதனை உறுதிசெய்துள்ளனர்.