165
வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நிலத்துக்கடியில் 176 கிலோ மீற்றர் அழத்தில் ரிக்டர் அளவுகோலில் 7. 5 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love