ஸ்டீவ் ஸ்மித் பங்களாதேஸ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திரும்பப் பெற்றுள்ளது. பந்தினை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை ஓருவருட தடைவிதித்துள்ளதனால் பிரிமீயர் லீக் இருபதுக்கு20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்தநிலையில் பங்களாதேஸ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடுவதற்காக கொமிலா விக்டோரியன்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் இதற்கு ஏனைய அணிகள் எதிர்ப்பு தெரிவித்ததனால் ஸ்மித் பங்கேற்க பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அனுமதி அளிக்காதிருந்தது. எனினும் தற்போது ஸ்மித் மீதான தடையை பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நீக்கியுள்ளது.
நான்கு அணிகள் தனித்தனியாக, அவர்கள் தெரிவித்த எதிர்ப்பை திரும்பப் பெறுவதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளதனால் இவ்வாறு தடையை நீக்கியுள்ளதாக பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது