ஆப்கானிஸ்தானில் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 15 தலீபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகானத்தில் உள்ள அல்மார் மாவட்டத்தில் சில பகுதிகளில் தலீபான்கள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்த பகுதிகளுக்கு சென்ற ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே தலீபான் தீவிரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டதுடன் அதிகளவான பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்திய நவீன ஆயுதங்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை ராணுவத் தரப்பில் ஏற்பட்ட உயிர் சேத விவரம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஆப்கானிஸ்தானில் 15 தலீபான் தீவிரவாதிகள் பலி…
171
Spread the love