இலங்கை பிரதான செய்திகள்

காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இடைநிறுத்தம்


72 காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலும் மறு அறிவித்தல் வரும் வரையிலும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

காவல்துறை மா அதிபரின் பரிந்துரைக்கமைய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் 27 பிரதான காவல்துறை பரிசோதகர்கள், 45 காவல்துறை பரிசோதகர் உட்பட 72 காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அது பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரை மற்றும் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் உத்தரவுப்படி இடைநிறுத்தப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.