148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் வங்காலை கடற்பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் நபர் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் வங்காலை காவல்நிலையத்தில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் வங்காலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love